NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்
    ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது

    நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 28, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோதமாக நிலம் வைத்திருந்தது தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

    8.36 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹேமந்த்.

    அதனைத்தொடர்ந்து அவர் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, அவருக்குப் பதிலாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்பாய் சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

    தற்போது அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாததால், ஹேமந்த் சிறையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

    வழக்கு பின்னணி

    சோரனின் சட்ட விரோதமான உடைமையில் உள்ள நிலம்

    சோரனுக்கு எதிரான வழக்கு 2023 இல் பத்கெய்ன் பகுதியைச் சேர்ந்த நில வருவாய் ஆய்வாளர் பானு பிரதாப் பிரசாத் கைது செய்யப்பட்டதிலிருந்து உருவானது.

    பிரசாத் நில அபகரிப்பு மற்றும் அசல் நிலப் பதிவேடுகளைப் பொய்யாக்குவதில் ஈடுபட்ட சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மீட்கப்பட்ட ஆவணங்களில் சோரன் சட்ட விரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் 8.36 ஏக்கர் நிலத்தின் படமும் இருந்தது.

    விசாரணை விவரங்கள்

    சட்டவிரோத நடவடிக்கைகளுடன் முதலமைச்சரை இணைக்கிறது

    அமலாக்க இயக்குனரகம் (ED) ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் 2009 இன் MGNREGA "ஊழல்" உட்பட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தது.

    இந்த விசாரணையின் போது, ​​ராஞ்சியில் ராணுவ நிலத்தை சட்டவிரோதமாக விற்று வாங்கியது தொடர்பாக பிரசாத்தின் பெயர் வெளிவந்தது.

    பிரசாத்துடன் ஹேமந்த் சதி செய்து அரசு பதிவுகளை பொய்யாக்கி சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கினார் என்று ED குற்றம் சாட்டுகிறது.

    இந்த முறைகேடான சொத்துக்களுக்கான ஆதாரங்கள் பிரசாத்தின் மொபைல் போனில் இருந்து, அவரை ஹேமந்துடன் தொடர்புபடுத்தியதாக கூறப்படுகிறது.

    மறுப்பு

    குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர்

    ED வழங்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்கள் இருந்தபோதிலும், ஹேமந்த் தொடர்ந்து எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்.

    குறித்த காணி தனக்கு சொந்தமானது என தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஹேமந்தின் கூற்றுப்படி, சர்ச்சைக்குரிய நிலம் "புயின்ஹாரி" நிலம், சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் கீழ் இதை யாருக்கும் மாற்ற முடியாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹேமந்த் சோரன்
    ஜார்கண்ட்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    ஹேமந்த் சோரன்

    "ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின்
    கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன் ஜார்கண்ட்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது கொலை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025