
கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மக்களுக்கு நற்செய்தி: இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று, தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வலு குறையக்கூடும்.
இதன் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பம்
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உயரும் வெப்பம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று, ஏப்ரல் 9 முதல் 11 ஆம் தேதி வரை, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்வாக இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அங்கு அதிகபட்ச வெப்பநிலை 37°C வரை, குறைந்தபட்ச வெப்பநிலை 28°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 10) சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.