
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் இன்று(நவ.,2) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இலங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் காரணத்தினால் இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மழை குறித்த பதிவு
#BREAKING || தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
— Thanthi TV (@ThanthiTV) November 2, 2023
"ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்… pic.twitter.com/bfy69JMivq