4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 10 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை டிசம்பர் 11 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.