24 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்] ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே, மே 21 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்
மே 22
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.