Page Loader
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

எழுதியவர் Nivetha P
Apr 07, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் நாளை(ஏப்ரல்.,8) வருகை தரவுள்ளார். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காகவே கடந்த 2 நாட்கள் போலீசார் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. டிஜிபோ சைலேந்திர பாபு நேரடியாக களத்தில் இறங்கி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். இதனையடுத்து சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை வரும் மோடி அவர்கள் சென்னையில் தனது சுற்றுப்பயணத்தினை முடித்து கொண்ட பின்னர் தனி விமானம் மூலம் மைசூருக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு