அடுத்த செய்திக் கட்டுரை
ஹரியானா ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை
எழுதியவர்
Sindhuja SM
Feb 25, 2024
07:30 pm
செய்தி முன்னோட்டம்
ஹரியானா இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி, ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எஸ்யூவியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் ரதியுடன் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட போது ரதி மற்றும் அவரது கூட்டாளிகள் வாகனத்திற்குள் இருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள பிரம்மசக்தி சஞ்சீவனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே முன்னாள் எம்.எல்.ஏ நஃபே சிங் உயிரிழந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை
#Haryana #NafeSinghRathi pic.twitter.com/A0BBDKZHWj
— NDTV (@ndtv) February 25, 2024