Page Loader
கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன
புனித நகரை முழுமையாக சுத்தம் செய்ய வாரங்கள் ஆகலாம்

கன்வார் யாத்திரை: ஹரித்வாரில் 30,000 டன் குப்பைகள் குவிந்துள்ளன

எழுதியவர் Sindhuja SM
Jul 17, 2023
12:53 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் குவிந்துள்ள சுமார் 30,000 டன் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர். கங்கை நீரைப் பெறுவதற்காக ஒவ்வொரு வருடமும் கன்வார் யாத்திரையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருவது வழக்கம். இந்த வருடம் கன்வார் யாத்திரையை முன்னிட்டு, சுமார் 40 மில்லியன் சிவ பக்தர்கள் ஹரித்வார் புனித நகரத்திற்கு வருகை தந்தனர். இதனையடுத்து, ஹர்-கி-பௌரியில் இருந்து 42 கிமீ வரை, கன்வார் பகுதியில் உள்ள கங்கா காட்ஸ், சந்தைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சாலைகள் குப்பைகளால் நிறைந்துள்ளன. கழிவுகளை அகற்ற முயற்சித்து வருவதாகவும், ஆனால் புனித நகரை முழுமையாக சுத்தம் செய்ய வாரங்கள் ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிஜா

 600 கூடுதல் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர் 

குப்பை மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது என்று நகராட்சி நகர ஆணையர் தயானந்த சரஸ்வதி கூறியுள்ளார். "கங்கை தொடர்ச்சி மலைகள், சாலைகள், பாலங்கள், வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவற்றை 24 மணிநேரமும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துப்புரவு பணிக்காக பணியாளர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்தியுள்ளோம். மேளா பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க துவங்கியுள்ளோம்,'' என்று சரஸ்வதி தெரிவித்துள்ளார். பொதுவாக, ஹரித்வாரில் தினமும் 200-300 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. ஆனால், இது கன்வார் யாத்திரை மற்றும் பிற பண்டிகைகளின் போது 500-2000 டன்களாக அதிகரிக்க்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.