தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி
திமுகவின் MP தயாநிதி மாறனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்துள்ளனர் சில மர்ம நபர்கள். மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவியின் மொபைல் எண்ணிற்கு, வெளிநாட்டு தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள், ஹிந்தியில் தாங்கள் ஆக்சிஸ் வங்கியிலிருந்து பேசுவதாக கூறியுள்ளனர். இதுப்போன்ற போன் கால் அவருக்கு 3 முறை வந்துள்ளது. 3 முறையும் அவரை தொடர்புகொண்ட நபர்கள் ஹிந்தியில் தான் பேசியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 3 முறை போன் செய்து பேசியதை தொடர்ந்து, திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம், அவர்களது இணைப்பு வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாநிதி மாறன் புகாரளித்துள்ளார்.