Page Loader
ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி 
ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அனுமதி

ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 24ஆம் தேதி உத்தரவிட்டது. தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முஸ்லீம் மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இன்று அந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியானது. அதில், தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ட்விட்டர் அஞ்சல்

அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு