குஜராத் மாநிலத்தில் நெஞ்சு வலியோடு பேருந்து ஓட்டி பயணிகளை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர் மரணம்
குஜராத் மாநில போக்குவரத்து கழகத்தில் ட்ரைவராக பணிபுரிபவர் பர்மால் அஹிர். 40 வயதாகும் இவர் சோம்நாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தினை எடுத்துள்ளார். இந்த பேருந்தினை அவர் மறுநாள் காலை 7.05 மணியளவில் ராதண்பூர் நகர் வரை கொண்ட சென்று அதிலுள்ள பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்பது அந்த போக்குவரத்து கழகத்தின் போக்குவரத்து விதிகள் ஆக விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராதன்பூரில் இருந்து 15 கிமீ., தொலைவிற்கு முன்னதாக அவர் வராஹி என்னும் இடத்தில் காலையில் டீ அருந்த பேருந்தினை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது திடீரென பர்மால் அஹிருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
சீட்டுலயே சரிந்து விழுந்த பர்மால் அஹிர்
ஆனால் அவர் வேறெங்கும் வாகனத்தினை நிறுத்தாமல் வண்டியினை தொடர்ந்து ஒட்டி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு இந்த பேருந்தானது 15 நிமிட கால தாமதத்தோடு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் தனது பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறங்குவதை பார்த்த பின்னர் பர்மால் அஹிர் சீட்டிலேயே சரிந்துள்ளார். இதனை பார்த்த அப்பேருந்து நடத்துநர் மற்றும் அங்கிருந்தோர் அவரை உடனடியாக ராதண்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை தெரிவித்துள்ளனர். தன்னை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் அவரது கடமையினை செய்து முடித்த அந்த ஓட்டுநரின் மரணம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.