
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன், டிசம்பர் 2ஆம் தேதி, மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறும் குளிர்கால கூட்ட தொடரில், தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2nd card
நாடாளுமன்றத்தில் எத்தனை மசோதாக்கள் நிலுவையில் உள்ளது?
நாடாளுமன்றத்தில் தற்போது 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அதில் 12 மசோதாக்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் 7 புதிய மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த, நெறிமுறை குழுவின் அறிக்கையும் தாக்கல் இந்த கூட்டத் தொடரில் செய்யப்பட உள்ளது.
நெறிமுறைகள் குழு பரிந்துரைத்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு, நாடாளுமன்றம் அந்த அறிக்கையை ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே மூன்று அறிக்கைகளை சமீபத்தில் ஏற்றுக் கொண்டதால், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை மாற்றும் மசோதாவும் தாக்கல் செய்யப்படுகிறது.