கோவாவிற்கு குறைகிறதா மோகம்? வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 60% குறைந்துள்ளது
இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பிரியமான தேர்வான கோவா, கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை கண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாவில் மாநிலம் மீண்டு வந்தாலும், வெளிநாட்டவர்களின் வருகை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. கோவாவின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறையை நம்பி உள்ளது. தற்போது இந்த சரிவு அதன் வருவாயை அதிகமாக பாதித்துள்ளது. போக்குவரத்து, பாதுகாப்பு, சேவைகளின் விலை மற்றும் உள்கட்டமைப்பு சிக்கல்கள் முதல் புவிசார் அரசியல் பதட்டங்கள் வரை பல காரணிகள் இந்த மாற்றத்திற்கு பங்களிக்கின்றன.
Twitter Post
பல காரணிகளால் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளது
எக்ஸ் பக்கத்தில் ராமானுஜ் முகர்ஜீ என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை படி, கோவாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், கோவா கிட்டத்தட்ட 9.4 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, ஆனால் 2023 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை நவம்பரில் 4.03 லட்சமாக குறைந்துள்ளது என்று ஓஹெரால்டோ தெரிவித்துள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 60% குறைந்துள்ளது. குறிப்பாக, 2018 உடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 82% குறைந்துள்ளது, இது மாநிலத்தின் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்திற்கு கவலையளிக்கும் போக்கு.