3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?
கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது இன்று மே 03 முதல் 05 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அனைத்து விதமான விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்திற்கான விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது. இதனால் மூன்று நாட்களுக்கு கோ பர்ஸ்டின் விமான சேவையை நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது. மேலும், கோ ஏர் விமானங்களை சென்னை மற்றும் மும்பை, கேரளா மாநிலத்திற்கு இயக்குகிறது. டிக்கெட் விலையையும் உயர்த்தியுள்ளது. இந்த தகவலை கேட்டு விமான பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கோ பர்ஸ்ட் விமான போக்குவரத்தை ரத்து செய்ததால், விளக்கம் கேட்டுள்ளது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்.