Page Loader
ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 
பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 

எழுதியவர் Sindhuja SM
Apr 11, 2023
03:00 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச பள்ளியில் மதிய உணவு வாங்கும் போது சூடான பருப்பு பாத்திரத்தில் விழுந்த ஐந்து வயது சிறுமி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் பான்ஸ்லாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 1 ஆம் வகுப்பு மாணவி தேஜேஸ்வரி தாண்டியா, மற்ற குழந்தைகளுடன் உணவைப் பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது, குழந்தைகள் முன்னால் செல்வதற்கு ஒருவரையொருவர் தள்ளி இருக்கின்றனர். உணவு வாங்கும் பரபரப்பிற்கு மத்தியில், சூடான பருப்பு பாத்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுமி, திடீரென அதற்குள் தள்ளப்பட்டார். ஆரம்ப சிகிச்சைக்காக பானுபிரதாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

details 

பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கு

பின்னர் காயங்கள் கடுமையாக இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு குழ்ந்தை மாற்றப்பட்டது. சிறுமியின் உடலில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விதிகளின்படி, மதிய உணவு கொடுக்கும் போது, மாணவர்களை அமர வைத்து உணவைத் தனித்தனியாக வழங்க வேண்டும். பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பானுபிரதாப்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பிரதிக் ஜெயின் கூறியுள்ளார். "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.