Page Loader
தொழிலாளர் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க முடிவெடுத்துள்ள ஜெர்மனி
ஜெர்மனின் chancellor ஓலாஃப் ஷோல்ஸுக்கு, பிரதமர் மோடி விருந்தளித்தார்

தொழிலாளர் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க முடிவெடுத்துள்ள ஜெர்மனி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
06:01 pm

செய்தி முன்னோட்டம்

திறமையான தொழிலாளர் விசாக்கள் (skilled labour visas) மற்றும் இந்திய நிபுணர்களுக்கான பணி அனுமதிக்கான (work permits) வருடாந்திர வரம்பை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை ஜெர்மனி வெளியிட்டுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு, வெள்ளிக்கிழமை, பிரதமர் மோடி விருந்தளித்தார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க Scholz நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விசா கொள்கை

எளிதாக்கப்படும் ஜெர்மன் விசா கொள்கை 

2022 இல், இந்தியாவும் ஜெர்மனியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கான நகர்வு வசதிக்காக இடம்பெயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தற்போது, ஜெர்மனி தனது விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதாகவும், ஜெர்மனியில் இந்திய தொழில்முறை தகுதிகளின் அங்கீகாரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. ஜெர்மன் பொருளாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஜெர்மனி பல்வேறு தொழில்களில் நிரப்பப்படாத 5.7 லட்சத்திற்கும் அதிகமான வேலை காலியிடங்களுடன் போராடுகிறது. இந்த தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு திறமைகளை ஈர்ப்பதில் புதிய விசா கொள்கை ஒரு அத்தியாவசிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.