இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர்
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் ஒரு தெரு முனையில் நின்று டீ அருந்துவதை போன்ற ஒரு புகைப்படம் ஜெர்மன் தூதரகத்தால் பகிரப்பட்டுள்ளது. சனிக்கிழமை(பிப் 25) அன்று இந்தியா வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரதமர் மோடியை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து அன்றே சந்தித்தார். அதன் பின், இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், டெல்லியில் ஒரு சின்ன கடையில் டீ வாங்கி குடிக்கும்படியான புகைப்படங்கள் பகிராப்ட்டுள்ளன. "ருசியான ஒரு கப் டீ இல்லாமல் இந்தியாவை எப்படி அனுபவிக்க முடியும்? சாணக்யபுரியில் ஒரு தெரு முனையில் உள்ள எங்களுக்குப் பிடித்த டீக்கடைக்கு ஓலாஃப் ஸ்கோல்ஸை அழைத்துச் சென்றோம்." என்று ஜெர்மன் தூதரகம் ட்விட்டரில் கூறியுள்ளது.