Page Loader
பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்

பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

எழுதியவர் Sindhuja SM
Feb 25, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார். "ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்கனவே நல்ல உறவு உள்ளது. மேலும், இந்த உறவை வலுப்படுத்துவோம் என்று நம்புகிறேன். நமது நாடுகளின் வளர்ச்சி மற்றும் உலகின் அமைதி தொடர்பான அனைத்து தலைப்புகள் குறித்தும் தீவிரமாக விவாதிப்போம் என்று நம்புகிறேன்" என்று செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். அதன் பின், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இந்த நிகழ்வின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அமைச்சர்களை சந்தித்தார். அடுத்து, இவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

குடியரசு தலைவர் மாளிகையில் ஜெர்மன் அதிபருக்கு அளிக்கப்பட்ட மரியாதை