Loading...
வீரமணி போக்சோ வழக்கில் பெரும் பணம் கைமாறியதா? SIT விசாரணை கோரி அண்ணாமலை அறிக்கை
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கில் SIT அமைக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

வீரமணி போக்சோ வழக்கில் பெரும் பணம் கைமாறியதா? SIT விசாரணை கோரி அண்ணாமலை அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், முறையான விசாரணை நடத்த கோரி 'வி த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், ஆரம்பத்தில் நபர்களை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி வழக்கை மூட தமிழ்நாடு காவல்துறை முயன்றதாக குறிப்பிட்ட அண்ணாமலை, நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே உண்மைகள் வெளிவரத் தொடங்கியதாக சுட்டிக்காட்டினார்.

அத்துமீறல்

தொடர் பாலியல் அத்துமீறல்கள்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் மேலும் பல சிறுமிகள் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வழக்கில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், குற்றவாளியைப் பாதுகாக்க உதவிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை வெளிக்கொண்டு வர உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படக் கூடாது என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT