
பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: முன்விரோதம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி பூச்சி சுதாகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் திருமழபாடி அருகிலுள்ள புதுக்கோட்டை கிராமத்தினை சேர்ந்தவர் சுதாகர்.
இவர் 'பூச்சி சுதாகர்' என்று அப்பகுதியில் அழைக்கப்படும் ஒரு பெரிய ரவுடி ஆவார்.
இவர் மற்றோரு ரவுடியான சைக்கோ பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசன் மனைவி மீது ஆசைப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஜெகதீசன் மரணமடைந்த நிலையில், அவரது மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார் பூச்சி சுதாகர்.
இதன் காரணமாக இறந்துபோன ஜெகதீசனின் தம்பியும், ரவுடியுமான சைக்கோ பாஸ்கர் சுதாகர் மீது கொலைவெறியில் சுற்றி வந்துள்ளார்.
கொலை
சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட ரவுடி
இந்நிலையில் இந்த முன்விரோதத்தினை மனதில் கொண்டு சைக்கோ பாஸ்கர் தனது நண்பரான அர்ஜுன் ராஜ் என்பவரோடு பூச்சி சுதாகர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் முன் நின்றிருந்த இருசக்கர வாகனத்தினை இவர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
பின்னர் கோபம் தீராத சைக்கோ பாஸ்கர் வீட்டின் முன்பகுதியினையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இதனிடையே சத்தம் கேட்குது என்று பூச்சி சுதாகர் வீட்டினை விட்டு வெளியில் வந்ததாக தெரிகிறது.
அப்போது அவரை கண்ட ஆத்திரத்தில் சைக்கோ பாஸ்கரும், அர்ஜுன் ராஜும் இணைந்து பூச்சி சுதாகரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
வெட்டுப்பட்ட சுதாகர் சம்பவயிடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இதுகுறித்து தற்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.