திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் கோளாறு காரணமாக, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம், மாநிலத் தலைநகருக்குத் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று(பிப் 24) முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
விமானம், மதியம் 12:15 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், 182 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் IX-385 விமானத்தின் வால் பகுதி, காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது ஓடுபாதையில் மோதியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு வசதியாக அரபிக்கடலில் எரிபொருள் கொட்டப்பட்டது என்று PTI தெரிவித்துள்ளது.
அதனால், விமான நிலைய நிர்வாகம் முழு அவசர நிலையை அறிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்படும் வீடியோ
#WATCH | Dammam bound Air India Express flight from Calicut diverted to Thiruvananthapuram due to technical reasons lands safely at the airport. A full emergency was declared at the Thiruvananthapuram airport for the landing of this flight pic.twitter.com/22EunuU0n5
— ANI (@ANI) February 24, 2023