Page Loader
சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 
சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்

சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 

எழுதியவர் Nivetha P
Oct 06, 2023
07:56 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கிண்டியிலுள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ. வளாகத்தில் நாளை(அக்.,6) காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் தொழில் பயிற்சி மற்றும் தொழில் துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்." "அதன் ஓர் அங்கம் தான் இந்த மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம்களை ஓராண்டிற்கு இருமுறை நடத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை 

முன்பதிவு செய்வதற்கான மொபைல் எண்கள் 

மேலும், மூத்த குடிமக்கள் தங்கள் வயதுக்கேற்ப எப்படி தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது? ஆரோக்கியமாக எவ்வாறு வாழ்வது? என்பது குறித்த மருத்துவ ஆலோசனைகள் அதனை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் கொண்டு வழிநடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சட்ட ஆலோசனைகளை சட்ட வல்லுநர்கள் கொண்டு தேவைப்படுவோருக்கு வழங்கப்படும். இந்த முகாம்களில் கலந்துகொள்ள முன்பதிவுகளும் செய்து கொள்ளலாம், நேரடியாக குறிப்பிட்ட இடத்திற்கு வந்தும் கலந்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதில் பங்கேற்பதற்கான முன்பதிவிற்கு 93610 86551, 96554 17039 உள்ளிட்ட மொபைல் எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.