Page Loader
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு
அவர் மீது POCSO சட்டம் மற்றும் IPCஇன் 354(A) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2024
09:06 am

செய்தி முன்னோட்டம்

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது POCSO சட்டம் மற்றும் IPCஇன் 354(A) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, பிப்ரவரி 2ஆம் தேதி, மோசடி வழக்கு ஒன்றில் உதவி பெறுவதற்காக தாய் மற்றும் மகள் எடியூரப்பாவை காண சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 2008 மற்றும் 2011 வரையிலும், மே 2018 இல் சிறிது காலமும், மீண்டும் ஜூலை 2019 முதல் 2021 வரை, கர்நாடக முதல்வராக இருந்துள்ளார் எடியூரப்பா.

ட்விட்டர் அஞ்சல்

எடியூரப்பா மீது POCSO வழக்கு