
'சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பற்றது': வெளிநாட்டு பெண்ணின் வைரலாகும் இன்ஸ்டா பதிவு
செய்தி முன்னோட்டம்
சென்னையை பாதுகாப்பற்றது என்று கூறி, ஒரு வெளிநாட்டு மாணவி, ஒரு வைரல் பதிவில், நகரத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளார்.
அவரின் சமூக வலைதளப்பக்கத்தில் நகரின் ஒரு இடத்திலிருந்து பயணிக்க அவர் ஆட்டோவை தேர்வு செய்தபோது, அந்த ஆட்டோ டிரைவர் தன்னிடம் அத்துமீற முயற்சித்ததாகவும், அதோடு தன்னை ஆட்டோவிலிருந்து வெளியே தூக்கி எறிந்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"மேலும் மோசமான விஷயம் என்ன?" என்று கேட்ட அவர், தனக்கு யாரும் உதவிக்கு வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
அந்தப் பெண் தனது பதிவை புகார் வடிவமாக இன்ஸ்டாகிராமில் சென்னை நகர மேயர், சென்னை காவல்துறை, ரேபிடோ மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
எனினும் அந்த வீடியோ தற்போது அவரது இன்ஸ்டா பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
தன்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என அதிர்ச்சி பதிவு
இந்தியா டுடே வெளியிட்ட இந்த செய்தியின் படி, அந்த பெண் உதவிக்கு அழைத்தபோது ஒருவர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காலையில் நடந்து செல்பவர்கள் ஒன்றுமில்லாதது போல் எங்களை கடந்து சென்றனர். ஆபத்தில் இருக்கும் ஒரு பெண்ணை எந்த இடம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது? எந்த நகரம் நம்பர் பிளேட் இல்லாத ஆட்டோக்களை சுதந்திரமாக இயக்க அனுமதிக்கிறது? இங்கு வர அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது நடக்க எந்த அமைப்பு அனுமதிக்கிறது?" என்று கேட்டுள்ளார்.
அவர் சனிக்கிழமை காலை தானும் தனது தோழியும் திருவான்மியூர் கடற்கரைக்கு ஆட்டோவில் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறினார்.
ஆட்டோ டிரைவர் சரியான சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி கூறுகிறது.