LOADING...
சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
அதிகாலையில் சென்னையில் பனிமூட்டம்

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2025
11:43 am

செய்தி முன்னோட்டம்

சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பனி மூட்டம் நாளையும் தொடர்ந்து நிலவுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பனி மூட்டம் அதிகமாக நிலவுகிறது. குறிப்பாக, இன்று அதிகாலை நேரத்தில் சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை வழித்தடத்தில் செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்கள் பொதுவாக இயங்கும் நேரத்தை விட 15 நிமிட தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோன்று, சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், பனி மூட்டத்தின் காரணமாக விமானங்களின் தரை இறங்கும் நேரங்களை மாற்றி அமைக்கவும், சில விமானங்கள் ரத்தும் செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post