பட்ஜெட் 2024: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வெளியான அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட் 2024 பின்வரும் விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்: "நாம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்த வேண்டும்." என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறமையை மேம்படுத்துவதற்காக, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஐந்து திட்டங்களின் PM தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த ஆண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் துறைக்கு ரூ.1.54 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Twitter Post
PF முன்பணம் பெறுவதில் முன்வரம்பு இல்லை
வைப்பு நிதி பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, "அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியம். EPFOவில் பதிவு செய்த முதல் முறை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை 3 தவணைகளில் பெறலாம். இதனால், 210 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் எனத்தெரிவித்தார். இந்தத் திட்டம், புதிய ஊழியர்களுக்கு மூன்று தவணைகளில் நேரடி பலன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் ஒரு மாத ஊதியத்தை வழங்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவுசெய்யப்பட்ட முதல் முறையாக ஊழியர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம் ரூ.15,000 வரை வழங்குகிறது. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஆதரவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணியிடங்களில் பெண்களுக்கான முன்னுரிமை, அவர்களுக்கான தங்குமிடங்கள் மாநில அரசின் உதவியுடன் கட்டப்படும் என்றார். கூடுதலாக பெண்களுக்கான தொழில்முறை பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார். 1 கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 பட்ஜெட்டின் போது வேலைவாய்ப்பு தொடர்பான இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒன்று உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக முதல் முறை பணியாளர்களுக்கு. இரண்டாவது அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உள்ளடக்கியது. முதல் நான்கு வருடங்களுக்கான EPFO பங்களிப்புகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் ஊக்கத்தொகையை வழங்குகிறது. இந்த முயற்சியால் 30 லட்சம் இளைஞர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் ரூ.5000 உதவித்தொகை உடன் இன்டெர்ன்ஷிப்
மாதம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் முதலாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வரை திருப்பிச் செலுத்துவார்கள் என்றும் சீதாராமன் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் இந்த பகுதி 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிதியமைச்சர் இளைஞர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு மாதாந்திர இன்டர்ன்ஷிப் உதவித்தொகை ரூ.5,000 மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.6,000 வழங்கப்படும் என்றார். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் பிற வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
FY25 க்கு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் ஆகியவற்றிற்கு அரசாங்கம் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. புதிய மத்திய நிதியுதவி திட்டம், மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையுடன் இணைந்து, ஐந்தாண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களை திறன்படுத்துவதையும், விளைவுகளை மையமாகக் கொண்டு 1,000 தொழில் பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐ) மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு உத்தரவாதத்துடன் ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களை எளிதாக்கும் வகையில் 'மாதிரி திறன் கடன் திட்டம்' மாற்றியமைக்கப்படும்.