தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 2 மாத மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
இதனால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன் மற்றும் கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்தது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 14ஆம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த தடை, 61 நாட்கள் இருக்கும். அதாவது, ஜூன் 14ஆம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மீன்பிடி தடைக்காலம்
இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்
— Thanthi TV (@ThanthiTV) April 15, 2024
தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை#fishing #prohibition #tamilnadu pic.twitter.com/JaLlMEJB6k