Page Loader
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து-உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் 

எழுதியவர் Nivetha P
Apr 17, 2023
12:16 pm

செய்தி முன்னோட்டம்

துபாய் அல் ராஸ் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4ம் தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் மளமளவென தீ பரவத்துவங்கிய நிலையில், அங்கிருந்த குடியுருபுவாசிகள் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்து தீயினைக்கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், இந்த விபத்தில் சிக்கி தமிழ்நாடு மாநிலத்தினை சேர்ந்த 2 தொழிலாளர்கள், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓர் தம்பதி உட்பட 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 தமிழர்கள் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post