Page Loader
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து 

எழுதியவர் Nivetha P
Aug 07, 2023
02:58 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று(ஆகஸ்ட்.,7) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள எண்டோஸ்கோப்பி பிரிவின் அறையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. அந்த அறையில் தீ மளமளவென பரவி எரிய துவங்கிய நிலையில் அங்கிருந்து கரும்புகை வெளியானது. இதனால் அச்சம் ஏற்பட்டு, மருத்துவனமனைக்குள் இருந்த மக்கள் மற்றும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் என அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயினை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு மின் கசிவு தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தீ விபத்தின் வீடியோ பதிவு