'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார்
'பசுமை புரட்சியின் தந்தை' என போற்றப்படும் வேளாண்துறை விஞ்ஞானியான எம்.எஸ்.ஸ்வாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட ஸ்வாமிநாதன், தனது பள்ளிப்படிப்பு முடிந்ததும், கேரளாவின் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பின்னர் இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பசுமை புரட்சியினை முன்னின்று நடத்திய இவர், எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். அதுமட்டுமின்றி இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிந்த அறிஞர்
டாக்டர்.ஸ்வாமிநாதன், மத்திய திட்ட குழு உறுப்பினர் பதவி, துணை தலைவர் பதவி மற்றும் வேளாந்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் வகுத்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை இந்தியா வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக செயல்பட்ட ஸ்வாமிநாதன், அரிசி தட்டுப்பாட்டினை போக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிந்தார். ஆசியாவின் நோபல் விருதாக கருதப்படும் ரமோன் மகசேசே விருதினை வென்ற இவர், 3 பத்ம விருதுகளையும் பெற்றார். இந்தியா மற்றும் வெளிநாடு பல்கலைக்கழகங்களில் ஏராளமான டாக்டர் பட்டங்களை வென்று குவித்த இவருக்கு, மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். சுவாமிநாதனுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற காசநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் மருத்துவர் சௌம்யா ஸ்வாமிநாதன்.