
கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் நடைபெற்ற சோதனையில் 50 சவரன் நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது.
இந்த நகைகள் 13 பாக்கெட்களில் அடமானம் வைக்கப்பட்டு, அதனடிப்படையில் 18.67 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
போலி நகைகள் தொடர்பாக அவர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 126 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இதில் பல சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே செயலர்கள் பணிபுரிந்து வருவது, முறைகேடுகளுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வு
அமைச்சருக்கும் தெரிந்த நடந்ததா மோசடி என விசாரணை
இது போன்ற சூழலில் போலி நகைகள் அடமானம் வைத்து கடன் பெற்ற முறை பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் லாக்கரில் வைத்துள்ள நகைகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளதே பெரும் அதிர்ச்சியாகும்.
அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களின் நிதிநிலை மற்றும் கடன் விபரங்களை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.