தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், நேற்று தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் கட்சியான பாரத ரக்ஷா சமிதி (BRS) இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
"கே.சி.ஆரின் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை யசோதா மருத்துவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முடிக்கப்பட்டது. ஹெல்த் புல்லட்டினை வெளியிட்ட மருத்துவர்கள், கே.சி.ஆருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகத் தெரிவித்தனர்." என்று அக்கட்சி ட்விட்டரில் கூறியுள்ளது.
தகவ்ஜ்க்
குளியலறையில் வழுக்கி விழுந்த முன்னாள் முதல்வர்
"அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததால், கே.சி.ஆர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து பொது அறைக்கு மாற்றப்பட்டார். முழுமையாக குணமடைய இன்னும் 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்." என்று மேலும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
"தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான கே.சி.ஆருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில், மிக முக்கியமான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர். " என்று பிஆர்எஸ் தலைவர் தசோஜு ஸ்ரவன் கூறியுள்ளார்.
சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததை அடுத்து, அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.