
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது
செய்தி முன்னோட்டம்
சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்விந்தர் சிங், 41, என்ற ராணுவ வீரர் ஜார்க்கண்டில் உள்ள தன்பாத் ரயில் நிலையத்தில், புதுடெல்லி செல்லும் சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி உள்ளார்.
பின்னர் ரயில் பெட்டி உதவியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது கைதுப்பாக்கியால் அவரை சுட முயற்சித்துள்ளார். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கோடெர்மா ரயில் நிலையத்தில் அந்த நபர் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் அந்த நபர் மதுபோதையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டாரா என விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜூலையில், ஜெய்ப்பூர்-மும்பை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்ஸில் ஆர்பிஎப் வீரர், தனது உதவியாளர் உட்பட 4 பேரை சுட்டுக்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ரயிலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு பாதுகாப்பு அதிகாரி
#BREAKING 11:10pm
— Subhadip Roy (@SubhadipRoy23) October 12, 2023
Firing inside Sealdah Rajdhani Express. A trespasser, reportedly named Shri Harvinder Singh (41), working in Indian Army, who boarded B-8 coach of Sealdah– New Delhi #RajdhaniExpress from Dhanbad with improper ticket and started firing after altercation with TTE