Page Loader
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு
குண்டூர் நகரம்பாலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2024
02:38 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்ததை அடுத்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியைத் தவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பிவி சுனில் குமார், பிஎஸ்ஆர் சீதாராமஞ்சநேயுலு, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர் விஜய் பால், குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஜி பிரபாவதி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகார் சென்ற மாதமே ஈமெயில் மூலம் பெறப்பட்டதாகவும், சட்ட ஆலோசனை பெற்றபின்னர் நேற்று இரவு வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது

ட்விட்டர் அஞ்சல்

ஜெகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு

வழக்கின் பின்னணி

கிரிமினல் சதி என புகார் தெரிவித்துள்ள எம்எல்ஏ

TDP எம்எல்ஏ ராஜு தனது புகாரில், 2021ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் சிஐடியால் தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு கிரிமினல் "சதி" செய்ததால், தான் கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்த ராஜு, கைது செய்யப்பட்ட பிறகு அவர் உள்ளூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், சிஐடியிடம் ட்ரான்சிட் கைது வாரண்ட் இல்லை என்றும் அவர் கூறி, குண்டூரில் உள்ள ஏஜென்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ராஜு கைது செய்யப்பட்டபோது, ​​குமார் சிஐடி தலைவராகவும், சீதாராமஞ்சநேயுலு உளவுப் பிரிவாகவும், பால் ஏஎஸ்பி சிஐடியாகவும், ரெட்டி முதல்வராகவும் இருந்தனர்.