Page Loader
பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி
பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து - 'நமோ ஆப்' அசத்தல்

பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டுமா- 'நமோ' செயலியின் அசத்தல் வசதி

எழுதியவர் Nivetha P
Sep 17, 2023
01:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் மோடி இன்று(செப்.,17) தனது 73வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி பாஜக மற்றும் மத்திய அரசு சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களும், பாஜக கட்சியினரும் பிரதமரின் பிறந்தநாளினை கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே அவருக்கு நேரடியாக தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க 'நமோ ஆப்' ஓர் புதிய வசதியினை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதன்படி யாராக இருந்தாலும் மோடிக்கு வீடியோ மூலம் நேரடியாக தங்கள் வாழ்த்துக்களை கூறலாம் என்று தெரிகிறது.

ஆப் 

ரீல்ஸ் மூலம் வாழ்த்து செய்தி 

இந்நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் தனியாகவோ, குடும்பத்தினரோடோ ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து அதனை நமோ ஆப்பில் நேரடியாக பதிவிடலாம். அதுமட்டுமல்லாமல் வாழ்த்து அட்டைகளையும் இந்த ஆப் மூலம் அனுப்பலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இத்தகைய வசதிகளை பயன்படுத்த இந்த ஆப்பில் 'Modi story of Bharat Mata's Devoted Son' என்னும் முகப்பில் 'Seva Pakhwada' என்னும் பேனரை கிளிக் செய்யவும். அதில் உங்கள் வாழ்த்து வீடியோக்களை பதிவேற்றம் செய்ய 'வீடியோ அப்லோட்' செய்து, வாழ்த்து வகையினை தேர்வு செய்த பின்னர் 'போஸ்ட் வீடியோ' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, அப்லோட் செய்யப்பட்ட வீடியோவை காண 'வீடியோ பகுதி' பக்கத்திற்கு செல்லவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.