
தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை வான்முட்டும் அளவிற்கு கிலோ, 135ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு கொள்முதல் விலையிலேயே காய்கறிகளை வழங்கவும் மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறிவித்தது.
இதனிடையே, சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
வரத்துக் குறைவு காரணமாக மளிகை பொருட்களின் விலை, கிட்டத்தட்ட 20% வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 40 ரூபாய் வரையும், சீரகத்தின் விலை, ஒரு கிலோ 540 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நடக்கும் பருவமழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டதே விலையேற்றத்திற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மளிகை பொருட்களின் விலை
#JUSTIN || காய்கறி விலையை தொடர்ந்து அரிசி மளிகை பொருட்கள் விலையும் உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) July 3, 2023
அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் விலை கிடு கிடு உயர்வு
துவரம் பருப்பு விலை மொத்த விற்பனையில் 80 ரூபாயிலிருந்து 160 ரூபாயாக உயர்வு#vegetables | #grocery pic.twitter.com/1JscQhlp5V