Page Loader
வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக தகவல்

வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2024
02:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று வடமாநிலங்கள் பலவற்றிற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. அதாவது அம்மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் நேற்று பதிவான வெப்பநிலை அளவில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும், அடுத்த படியாக தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 104டிகிரி பாரன்ஹீட் அதாவது 40டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. IMD அளித்த தகவலின்படி, அதிகபட்சமாக ஈரோடு, சேலம், வேலூர், தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகின.

ட்விட்டர் அஞ்சல்

ஈரோடு மூன்றாவது இடம்