ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
களத்தில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.
முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் மறைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு காரணமாக அங்குள்ள வாக்கு சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.#SunNews | #ErodeEastByElection pic.twitter.com/Y58CfY4quk
— Sun News (@sunnewstamil) February 5, 2025