
ஆண்களை விட சிறப்பாக கார் ஓட்டும் பெண்கள்: ஆய்வில் தகவல்
செய்தி முன்னோட்டம்
கேரளா: பெண்கள் என்றாலே மோசமாக தான் வண்டி ஓட்டுவார்கள் என்ற தவறான பார்வை சமூகத்தில் இருக்கிறது.
அந்த கட்டுக்கதைகளை பொய்யாக்கும் வகையில் ஒரு ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த ஓட்டுநர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களை விட ஆண்கள் 13 மடங்கு அதிகமாக விபத்துக்களில் சிக்குகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
2018 முதல் 2022 வரை, எர்ணாகுளத்தில், 56,000 ஆண்கள், 4,379 பெண்கள் மற்றும் ஐந்து திருநர்களுக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
கிவ்ஜோ;
பெண் ஓட்டுநர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் எர்ணாகுளம் உள்ளது
'கேரளாவில் சாலை விபத்துகள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தகவல்கள் கடந்த வாரம் வெளியானது.
எர்ணாகுளத்தில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கிறது என்று பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆய்வு கூறுவதால், இந்த புதிய ஆய்வுக்கு எர்ணாகுளம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கேரளாவில் பெண் ஓட்டுநர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் எர்ணாகுளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான ஆண்கள் மிக வேகமாக வண்டி ஓட்டுவதால், அவர்கள் அதிக விபத்துகளில் சிக்குகின்றனர் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிகமாக ஆண்கள் தான் மது அருந்திவிட்டு வாகனம் ஓடுகின்றனராம்.
'ஓவர்டேக்' செய்யும் போது கூட ஆண்களை விட பெண்கள் தான் மிக கவனமாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.