Page Loader
இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்

எழுதியவர் Sindhuja SM
Apr 20, 2024
12:11 pm

செய்தி முன்னோட்டம்

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் நாளை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், "மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள்" காரணமாக, தனது திட்டமிடப்பட்ட இந்திய பயணத்தை ஒத்திவைத்ததாக இன்று காலை தெரிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த மஸ்க், திங்கள்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீட்டுத் திட்டங்களை அறிவிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தனது பயணத்தை தாமதப்படுத்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்தியாவிற்கு வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்