Page Loader
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு 
தமிழகத்தில் அமலுக்கு இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு 

எழுதியவர் Nivetha P
Jul 01, 2023
11:09 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கான மின்கட்டணம் 12 முதல் 52% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனையே பொதுமக்கள் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, கடந்த ஆட்சியின் திறனற்ற மேலாண்மை காரணமாக மின்சாரத்துறை வாரியத்தின் நிதிநிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.1,65,000 கோடி கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்த கடனை கட்டுக்குள் வைக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு வருடத்திற்கு 6% அல்லது 5 ஆண்டுகளில் 30% வரை மின்கட்டணத்தினை உயர்த்தப்பட வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் அறிவுறுத்தி அதற்கான ஒப்புதலையும் அளித்துள்ளது.

வணிகம் 

யூனிட்டுக்கு 13 பைசா முதல் 27 பைசா வரை உயர்வு 

இதனை தொடர்ந்து, அண்மையில் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்சார கட்டணம் மட்டும் யூனிட்டுக்கு 13 பைசா முதல் 27 பைசா வரை உயர்த்தி தமிழக மின்வாரியம் அறிவிப்பினை வெளியிட்டது. மேலும் இந்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், வீட்டிற்கான மின்சார இணைப்புகளின் கட்டணம் எவ்விதத்திலும் உயர்த்தப்படவில்லை. வணிகம், தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே மிக குறைந்தளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இன்று(ஜூலை.,1) முதல் மின்கட்டணமானது யூனிட்டுக்கு ரூ.11ல் இருந்து ரூ.11.25 வரை வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.