
தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
செய்தி முன்னோட்டம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவுற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாசன், நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தானும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அவருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தோ, வேட்பாளர்கள் தகவல் குறித்தோ எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியான திமுக உடன் கூட்டணி கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இதுவரை முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பாஜக கூட்டணியில் இணைந்த ஜி.கே.வாசன்
#Watch | "பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்"
— Sun News (@sunnewstamil) February 26, 2024
-பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான காரணங்களை பட்டியலிடும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்!#SunNews | #TMC | #BJP | #ParliamentElection2024 pic.twitter.com/rZoIbNpWsR