பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது
செய்தி முன்னோட்டம்
டெல்லி காவல்துறையை சேர்ந்த ஒரு பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் அனைவரிடமும் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
சுரேந்திர ராணா(42), 2012ஆம் ஆண்டு முதல் டெல்லி காவல்துறையில் தலைமைக் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
மோனா என்ற பாதிக்கப்பட்ட பெண், ராணாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2014இல் டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார்.
அவர்கள் இருவரும் இணைந்து கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தனர்.
அப்போது, மோனாவின் மீது சுரேந்திர ராணா காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மோனாவுக்கு உத்தரபிரதேச காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, மோனா தனது வேலையை விட்டுவிட்டு டெல்லியில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார்.
ட்ஜ்கவ்க்ன்
கொலை எப்படி நடந்தது?
எனினும், மோனா வேலையை விட்டு போன பிறகும் சுரேந்திர ராணா அவரை பின் தொடர்ந்து தொந்தரவு செய்திருக்கிறார்.
இதனால், செப்டம்பர் 8, 2021 அன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, சுரேந்திர ராணா மோனாவை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின் அவரது உடலை ஒரு சாக்கடையில் வீசிவிட்டு, அதை கற்களை வைத்து மறைத்துவிட்டார்.
ராணாவின் மைத்துனர்கள் ராபின்(26) மற்றும் ராஜ்பால்(33) ஆகியோர் உடலை மறைக்க அவருக்கு உதவினர்.
இந்த கொலையை தொடர்ந்து தான் ராணா தனது நாடகத்தை ஆரம்பித்திருக்கிறார்.
முதலில், மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ராணா, அரவிந்த் என்பவருடன் மோனா ஊரை விட்டு ஓடி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
டக்ஜ்வ்க்
2 வருடங்களாக மோனாவின் குடும்பத்தை ஏமாற்றிய ராணா
தொடர்ந்து மோனாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அவர் மோனாவை தேடுவது போல் நடித்துள்ளார்.
மாட்டிக்கொள்ளமால் இருக்க பலமுறை மோனாவின் குடும்பத்தினருடன் அவர் காவல் நிலையம் வரை சென்றிருக்கிறார்.
மோனா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை காட்டி கொள்வதற்காக, ஒரு பெண்ணை கொரோனா தடுப்பூசி போட அழைத்து சென்று, தடுப்பூசி சான்றிதழை மோனாவின் பெயரில் பதிவு செய்திருக்கிறார்.
எந்த சந்தேகமும் வராமல் இருக்க, மோனாவின் வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனைகளைச் செய்வதையும், மோனாவின் சிம் கார்டை பயன்படுத்துவதையும் அவர் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
இதற்கிடையில், ராணாவின் மைத்துனர் ராபின், மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு "அரவிந்த்" போல் நடித்திருக்கிறார்.
ட்ஜ்வ்
கடைசியில் ராணா எப்படி பிடிபட்டார்?
"அரவிந்த்" என்று கூறி மோனாவின் குடும்பத்தினரிடம் பேசிய ராபின் , தனக்கும் மோனாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று கூறி ஏமாற்றி இருக்கிறார்.
மேலும், இதை நம்ப வைக்க, ஹரியானா, டேராடூன், ரிஷிகேஷ் மற்றும் முசோரியில் உள்ள ஹோட்டல்களுக்கு விபச்சாரிகளுடன் சென்று காவல்துறையையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தையும் ராபின் ஏமாற்றி இருக்கிறார்.
ராணாவிடம் மோனாவின் பல பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள் இருந்தது. இந்த ஆடியோக்களையும் வைத்து ராணா ஏமாற்று வேலை செய்திருக்கிறார்.
இந்த வழக்கு இறுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றப் பிரிவுக்கு வந்தபோது, அரவிந்த் போல் நடித்து மோனாவின் குடும்பத்தினருடன் ராபின் பேசிய மொபைல் எண் 'ட்ராக்' செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளி வந்தது.
ட்ஜ்வ்க்ப்
உள்நோக்கத்தோடு மோனாவை காதலித்த ராணா
அதனையடுத்து, மோனாவை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அதை தற்போது போலீஸ் அதிகாரிகள் டிஎன்ஏ ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், ராணாவையும் அவரது இரண்டு கூட்டாளிகளையும் போலீஸார் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த மோனா ஒரு சிறந்த மாணவி மற்றும் வகுப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார். அவர் ஒரு அரசு அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவை வைத்திருந்தார்.
ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 12 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
மோனா ஒரு உயர் அதிகாரி ஆக போகிறார் என்பதை உணர்ந்த ராணா மோனாவை காதலில் விழவைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், மோனா அவரை ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.