தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து
அதிமுக கட்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர் செல்வம் நேரில்சென்று சந்தித்துப்பேசி, இருவரும் ஒன்றாக செயல்படுவதாக தெரிவித்தனர். பின்னர் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் ஓபிஎஸ் கூறியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில் பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர், ரூ.30,000கோடி ஊழல் தொடர்பான ஆடியோ விவகாரத்தால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை, எந்த தொழிலும் செய்யவில்லை. 1989ம்ஆண்டிற்கு பிறகு என்மீது எந்த சொத்தும் இல்லை. நான் விவசாயம் மட்டுமே செய்துவருகிறேன், சொத்துக்கள் வாங்கியதே இல்லை என்று ஆளும் கட்சியினை விமர்சனம் செய்துள்ளார்.
ஜீரோவும் ஜீரோவும் இணைந்தால் ஜீரோ தான் - எடப்பாடி பழனிச்சாமி
தொடர்ந்து பேசிய அவர், தலைவர் ஆளும் கட்சி அல்ல அதிமுக, தொண்டர்கள் ஆளும் கட்சி. ஜீரோவும் ஜீரோவும் இணைந்தால் ஜீரோ தான். ஓபிஎஸ் மற்றும் தினகரனின் சந்திப்பு காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்'ஸும் இணைந்தது மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் உள்ளது. கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் சபரீசனையும் பார்த்தால் திமுக கட்சியின் பி டீம் ஓபிஎஸ் என்பது உறுதியாகி உள்ளது. ஓபிஎஸ் உடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் எங்கே போனார்கள். பண்ருட்டி ராமசந்திரன் ஒரு கிளை செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் என்று ஏளனம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.