அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை
செய்தி முன்னோட்டம்
சென்ற மாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை அடுத்து, இன்று சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லம், மற்றும் ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள் உள்பட 3 இடங்களில் சோதனை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே நேரத்தில், கரூரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாக தெரிகிறது.
சென்ற முறை வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்ற போது, திமுக தொண்டர்கள் அடிதடியில் இறங்கியதை அடுத்து, தற்போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ED ரெய்டு
#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
— Thanthi TV (@ThanthiTV) June 13, 2023
சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள்
சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும்… pic.twitter.com/R8z6jS38Z7