Page Loader
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது
அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையினரால் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 21, 2024
09:26 pm

செய்தி முன்னோட்டம்

கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களிலேயே, இன்று மாலை அமலாக்க இயக்குனரகத்தின் குழு டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு விரைந்தது. இந்த வழக்கில் சம்மன் அனுப்ப முதல்வர் வீட்டுக்குச் சென்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அதிகாரிகள் சோதனை வாரண்ட் வைத்திருப்பதாகவும், அவரது வீட்டில் சோதனை நடத்தியது. அதன்பின்னரே அவர் கைது நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை அனுப்பிய 9 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ED விசாரணைக்கு ஆஜராகினால் கைது செய்யப்படலாம் என கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி கூறுவது என்ன?

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில்,"அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர்வார், சிறையில் இருந்து தனது கடமையை தொடர்ந்து செய்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. "அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சராக இருக்கிறார், தொடர்ந்து இருப்பார்" என்று ஆம் ஆத்மியின் அதிஷி கூறினார். தற்போது அதிஷி அரசாங்கத்தில் 2வது இடத்தில் உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. "நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம், இன்று இரவு அவசர விசாரணைக்காக பிரார்த்தனை செய்துள்ளோம்" என்று ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.

கலால் கொள்கை வழக்கு

டெல்லி கலால் கொள்கை வழக்கு என்றால் என்ன?

டெல்லி கலால் கொள்கை வழக்கின் கீழ், 2021-22 டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது. பின்னர் இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. மொத்த விற்பனையாளர்களின் லாப வரம்பு 5% இல் இருந்து 12% ஆக செயற்கையாக உயர்த்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்த ஒழுங்குமுறை கார்டெலைசேஷனை ஊக்குவித்ததாகவும், நிதி ஆதாயத்திற்காக மதுபான உரிமங்களுக்குத் தகுதியற்றவர்கள் பயனடைவதாகவும் அவர்கள் கூறினர். இந்த வழக்கில் தற்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.