Loading...
வாக்காளர்கள் நேரில் வரத் தேவையில்லை! SIR சர்ச்சைக்கு மத்தியில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய முடிவு
SIR சர்ச்சைக்கு மத்தியில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய முடிவு

வாக்காளர்கள் நேரில் வரத் தேவையில்லை! SIR சர்ச்சைக்கு மத்தியில் இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
06:26 pm

செய்தி முன்னோட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறுசீரமைப்பு (SIR) திட்டத்தில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பெறப்பட்ட முடிவுகளின்படி, அறிவிப்புகள் அனுப்பப்பட்ட வாக்காளர்கள் அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளே நேரடியாக சென்று ஆவணங்களை சேகரிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு உதவி மையங்கள்

விசாரணை நடைமுறைகள் மற்றும் எளிய மக்களுக்கான சிறப்பு உதவி மையங்கள்

தேர்தல் பதிவு அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வாக்காளர்களுக்கான விசாரணை நடத்தப்படும்.

இந்த விசாரணைகள் பெரும்பாலும் இணையவழியிலேயே நடைபெறும் என்றும், குடும்பத்தில் உள்ள ஏதேனும் ஒரு மூத்த உறுப்பினர் இதற்காக பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடற்றோர், தொழிலாளர்கள் மற்றும் இரவு தங்குமிடங்களில் வாழும் ஏழை எளிய மக்களின் பெயர்களைச் சேர்க்க ஏதுவாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் போதுமான எண்ணிக்கையிலான உதவி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

கடிதம் குறித்து விளக்கம்

அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையர்கள் மத்திய அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தக் கடிதம் ஆணையத்தின் கொள்கை முடிவுகள் அல்லது தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொடர்பானது அல்ல என்றும், பிற துறையிலிருந்து பணிமுறை ஒப்படைப்பில் வந்த ஓர் அதிகாரியின் செயல்பாடு தொடர்பானது மட்டுமே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஐடி பிரிவின் மீதான மேற்பார்வை மற்றும் அதிகாரப் பங்கீடுகள் முறையாகவே தொடர்வதாக முழு ஆணையத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காலக்கெடு நீட்டிப்பு

பல்வேறு மாநிலங்களில் காலக்கெடு நீட்டிப்பு மற்றும் சேர்க்கைக்கான வாய்ப்புகள்

கோவாவில் விடுபட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று படிவங்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகர் டெல்லியில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30 வரையிலும், மகாராஷ்டிராவில் அக்டோபர் 12 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பீகார் மற்றும் மேற்கு வங்கம் உட்பட 20 மாநிலங்களில் ஏற்கனவே SIR பணி நிறைவடைந்துள்ளது.

இதில் விடுபட்ட தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் தொடர் புதுப்பித்தல் செயல்முறையின் கீழ் தேர்தல் பதிவு அதிகாரி மூலம் விண்ணப்பித்து தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT