புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் என்பது பல ஆண்டுகளாக உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் மக்களுக்கு நிலையான விலையில் ரேஷன் வழங்கப்படுகிறது. இதற்கு பொது மக்கள் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அம்மாநில அரசு ரேஷன் கார்டினை தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி வழங்குகிறது. இந்த ரேஷன் கார்டினை ஆன்லைன் மூலமும் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்க http://tnpds.gov.in/ என்னும் இணையத்தளத்தினை பயன்படுத்தலாம். ஆன்லைன் ரேஷன் கார்டினை பெற ஆதார் கார்டு, அடையாள அட்டை உள்ளிட்டவையில் ஏதேனும் ஒன்று வேண்டும். வீட்டு முகவரிக்கான சான்றாக மின்சாரம் அல்லது தண்ணீர் ரசீது, வருமான வரி சான்றிதழ் ஆகியனவும் வேண்டும்.
ரேஷன் கடைகளில் க்யூ-ஆர் கோட் சிஸ்டம் அறிமுகம்
ரேஷன் விநியோகம் செய்யும் உரிமையானது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரேஷன் கார்டு தயாரிக்கும் பணியும் அந்த மாநில அரசின் கீழே வருகிறது. ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ரேஷன் கார்டு தயாரிக்கும் போர்டல் வேறுபடுகிறது. இந்த போர்ட்டல்களில் பெயர், முகவரி மற்றும் வருமானம் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். கொடுக்கப்படும் தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படும். சமீபத்தில் முதன்முறையாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் க்யூ-ஆர் கோட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், ரேஷன் கடைகளுக்கு எடுத்து செல்லும் பொருட்களின் தரத்தினை அறிந்துகொள்வதற்காக இந்த க்யூ-ஆர் கோட் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை நீலகிரியில் 65 கடைகளில் செயல்முறையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்