
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அக்டோபர் 1 முதல் Earned Leave Encashment அமல்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "ஈட்டிய விடுப்பு சரண்" (Earned Leave Encashment) நடைமுறை, வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் போது ஏற்பட்ட நிதிச் சுமையை சமாளிக்க, அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் 2026 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்நடைமுறையை 2024 அக்டோபர் 1 முதல் மீண்டும் செயல்படுத்தப்படுமென அறிவித்திருந்தார். தற்போது அதன்படி இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
புதிய நடைமுறையின் முக்கிய அம்சங்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் குவித்துள்ள ஈட்டிய விடுப்பில் இருந்து ஆண்டுக்கு 15 நாட்கள் வரை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கான பணப்பலன் ஊழியர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். இந்த முடிவால், சுமார் 8 லட்சம் பேர் பயனடைவார்கள் ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இந்த முடிவு, நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்த ஊழியர்களின் நலனைக் கணக்கில் எடுத்த அரசின் முக்கியமான நடவடிக்கையாக பொதுமக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.