LOADING...
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்

சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2025
11:55 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மேற்கொண்ட முக்கிய முன்னெடுப்பாக, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் ஏசி பேருந்துகள் இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் முறையாக அறிமுகமாகின்றன. இந்த புதிய பேருந்து சேவை திட்டம், காற்று மாசை குறைத்தல், எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தல், மற்றும் பசுமை போக்குவரத்துக்கு மாறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரப் பேருந்துகளை டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக கொண்டு வரும் முயற்சியை, தமிழக அரசு தற்போது வேகமாக முன்னெடுத்து வருகிறது.

சிறப்பம்சங்கள் 

பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன

பெரும்பாக்கம் பணி நிலையத்திலிருந்து 55 குளிர்சாதன வசதியுடைய மின்சார பேருந்துகள் மற்றும் 80 சாதாரண மின்சார பேருந்துகள் இன்று முதல் சேவையில் இணைக்கப்படுகின்றன. 7 சிசிடிவி கேமராக்கள் அவசரகால பொத்தான்கள் சீட் பெல்ட் மொபைல் சார்ஜிங் பாயிண்ட் ஒவ்வொரு பஸ்ஸிர்குள்ளும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் தாழ்தள வசதி இந்த சேவை, மற்ற பஸ் டிப்போக்களிலிருந்தும் படிப்படியாக விரிவு செய்யப்படும் என்றும், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.